Monday, May 18, 2009

திகில் நிமிடங்கள்......திக்....திக்...திக்....

நான் மிகுத்த மன அழுத்தத்துடன் அந்த சாய்வு நாற்காலியில் சென்று அமர்தேன். ஏதோ ஒரு இனம் புரியாத பயம் என்னை கவ்வி கொண்டது. நான் கைகளை இறுக்கமாக மூடி கொண்டு பற்களை கடித்து கண்களை மூடி பார்த்தேன். என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. எனது இதய துடிப்பு இரட்டிப்பு ஆகி இருந்தது. நான் பதட்டத்த்தின் உச்சத்தை அடைந்திருந்த அதே நேரம் எனக்கு அருகில் இருந்த அறையில் அவன் தனது கை உரையை அணிந்து முகமூடியால் தனது முகத்தை மறைத்து கொண்டு கிளம்பினான். அவன் கையில் கூரான கத்தி போன்ற ஆயுதம் இருந்தது. கைகளில் கை உரை அணிந்திருந்தான். அவன் அந்த அறையை விட்டு கிளம்பி என்னை நோக்கி விரைவது எனக்கு கண்ணாடி வழியாக தெரிந்தது. என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தேன் நான். என்னை நாற்காலியில் கட்டி போட்டது போன்ற ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது. நான் என் உள்ளங்கையில் இருந்த ரேகைகளை அழுத்தி கைகளை பிசைந்தவாறு இருந்தேன். நான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்த அதே நேரம் அவன் என்னை நோக்கி முரட்டு தனமாக முன்னேறி வந்தான். இதை சற்றும் கவனிக்காத நான் அங்கே அருகில் கிளாசில் வைத்திருந்த நீரை பருகி நாற்காலியில் சாய்ந்தேன். என்னை நோக்கி விரைந்து வந்தவன் எனது மோவாயை பிடித்து என்னை நாற்காலியில் பின்னோக்கி தள்ளினான். நான் நிலைகுலைந்து அந்த நாற்காலியில் சாய்ந்தேன். நான் செய்வதறியாத தவித்த அதே நேரம் அவன் எனது தாடையை பிடித்து அழுத்தி வாயின் அருகில் கத்தி போன்ற அந்த ஆயுதத்தை நீட்டினான். ஒரு நிமிடம் மூச்சி நின்று மறுபடி இயல்பு நிலைக்கு திரும்பினேன். அவன் அனாயாசமாக சிறிது கொண்டே என்னை பார்த்து கூறினான், "பயப்படாதீங்க! அந்த சொத்தை பல்லை பிடுங்கினால் தான் மற்ற பற்களை காப்பாற்ற முடியும் என்றான்". நானும் அசடு வழிந்ததவறு டாக்டர் கொஞ்சம் பாத்து வலி தெரியாமல் முடிச்சிருங்க என்று சிரித்தேன்.

No comments:

Post a Comment